உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’! - அமீர் கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது

மும்பை :


இந்திய சினிமாவை உலக சினிமாக்களுடன் போட்டி போட வைத்தவர்களில் முக்கியமானவர் பிரபல பாலிவுட் நாடிகர் அமீர் கான். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கிற்கான படங்களாக மட்டும் இன்றி, சமூகத்திற்கான படங்களாகவும் இருக்கின்றன. அமீர் கானின் நடிப்பில் வெளியான 'கயாமத் சே கயாமத் தக்', 'ராக்', 'குலாம்', 'லகான்', 'தாரே சமீன் பர்', '3 இடியட்ஸ்', 'பி.கே', 'தங்கல்', கடைசியாக நடித்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என அனைத்துப் படங்களும் இந்திய மக்களால் மறக்க முடியாத படங்களாகும்.

கதை தேர்வில் அதிகமான கவனம் செலுத்தி வரும் அமீர் கான், தற்போது 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகப் புகழ் பெற்ற ஆங்கிலப் படமான 'ஃபாரட்ஸ் கம்ப்' படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கிறார். உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹேங்கஸ் நடிப்பில் ராபர்ட் செமிச்ஜிக்ஸ் இயக்கத்தில் வெளியாகி உலக அளவில் வெற்றிப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது. ஒரு எளிய எதார்த்த மனிதனின் வாழ்கையே 'ஃபாரஸ்ட் கம்ப். பிறந்த வயதில் இருந்து நடக்க சிறமப்பட்டு வளரும் கதையின் நாயகன் தன் காதலியின் தூண்டுதலால் ஓட துவங்குகிறான். வாழ்கையில் எதை பற்றியும் கவலை இல்லாமல் வளரும் அவன் தன் தாயின் காதலை நெசஞ்சில் சுமந்தும், தன் காதலியின் நினைவுகளோடும் வாழ்கையின் பல்வேறு பரினாமங்களையும் கடக்கிறான். இறுதியில் தனது தாயும் இன்றி காதலியும் இன்றி வாழ்க்கையின் போக்குடன் எதார்த்தமாக தன் மகனுக்கு தன் அன்பை காட்ட துவங்கும் அப்பாவாக வாழ துவங்குகிறான் இதுவே 'ஃபாரஸ்ட் கம்ப்'. 'லால் சிங் ஜாத்தா' என்ற பெயரில் அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை ஏற்கனவே மக்கள் பார்த்திருந்தாலும், அமீர் கானின் நடிப்பில் அப்படம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருப்பதால், இப்படம் நிச்சயம் இந்திய சினிமாவின் முக்கிய திரைப்படமாக இடம்பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது