சென்னை:
"மாஜியை விட்றாதீங்க.. இவரையும் விட்றாதீங்க.." என திமுகவை விரட்டி விரட்டி பாஜக செக் வைத்து வருவதாக கூறப்படுகிறது. மோடியின் முதல் ஆட்சியில் இருந்தே ஊழலுக்கு எதிரான போக்கு என்பதை வலியுறுத்தி வருகிறது.
இப்போதைய 2-வது முறை ஆட்சியில் ஊழலுக்கு எதிரான செயலை கையில் எடுத்து வருகிறது. அதன்படி, ஊழல் செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைதாகி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு எச்.ராஜா பேசும்போது, "இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ஊழல் செய்திருக்கிறார்...
அவர் தான் அடுத்த கைது" என்று ஒரு பேட்டியில் சொன்னார். இதையடுத்து அந்த நபர் யாராக இருக்ககூடும் என்றும், கண்டிப்பாக அது திமுக அல்லது கூட்டணி கட்சி சம்பந்தப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும் கருத்துக்கள், யூகங்கள் பலமாக எழுந்தன.