முதுமையிலும் ஆழ்ந்த தூக்கம் தேவை

* * * * * கேள்வி : நல்ல தூக்கத்துக்கு உங்கள் ஆலோசனை என்ன? பதில் : பின்வரும் வழி முறைகளை தவறாமல் பின்பற்றினால், நல்ல உறக்கம் நிச்சயம் வரும். * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும். அதே போல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம். படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும். தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரைகள், பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும். உதாரணம் : நீர் மாத்திரை, காபி, டீ, மது, புகைபிடித்தல். மாலையில் செய்யும் உடற்பயிற்சி, இரவில் நல்ல உறக்கத்தை கொடுக்கும். * பகலில் தூக்கம் 30-லிருந்து 40 - நிமிடங்கள் மட்டும் போதுமானது. படுக்கும் இடத்தை தூக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவில் படுத்துக் கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. படுத்தவுடன் 30-லிருந்து 45 நிமிடங்களில் தூக்கம் வரவில்லையென்றால், படுக்கையைவிட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம். அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். படுப்பதற்கு முன்பு சிறதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்துக்கு நல்லது. மன உளைச்சல்களும் கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதை தவிர்ப்பது மிக அவசியம். இதற்கு தியானம் மிகச்சிறந்த மருந்து. படுக்கைக்குச் செல்லும் முன், முடிந்தால் சற்று வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு சுமார் அரைமணி நேரம் தியானம் செய்துவிட்டு படுக்கைக்குச் சென்றால் தூக்கம் உங்களை ஆரத்தழுவிக் கொள்ளும்.


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்