ஒரு பிராமணர் தானியங்களைப் பிச்சையாகப் பெற்று அதைக் கொண்டு உணவு சமைத்து உண்ண வேண்டும்.

பிராமணர் மன்னா நாள் உஞ்ச விருத்தி (அன்றைய பிராமண தர்மப்படி ஒரு பிராமணர் தானியங்களைப் பிச்சையாகப் பெற்று அதைக் கொண்டு உணவு சமைத்து உண்ண வேண்டும். மறுநாளைக் கென்று சேமித்து வைக்கக் கூடாது) செய்து அதை இறைவனுக்குப் படைத்து எஞ்சியதைக் குடும்பத்துடன் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறேன். இன்று அதே போல கொண்டு வந்த உணவை இந்த நாய் வாய்வைத்து உருட்டிக் கொட்டிவிட்டது. பசியால் வந்த கோபத்தில் இந்த நாயைக்கல்லால் அடித்து விட்டேன். பொறுமை காக்க வேண்டிய நான் பொறுமையின்றிக் கல்லால் அடித்தது தவறுதான். நீங்கள் இதற்கு என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி முடித்தார். மன்னருக்கு என்ன தீர்ப்பு வழங்குவது என்று தெரியவில்லை விசித்திரமான வழக்காக இருக்கிறதே என ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். நாயை அழைத்து. நாயே பிராமணர் தன் தவறுக்கு வருத்தப்படுகிறார். அதில் என்ன தீர்ப்பு வழங்குவது என எனக்குப் புரியவில்லை நீ பாதிக்கப்பட்டவனாக இருக்கிறாய் மேலும் மனிதர்களைப் போலச் சிந்திக்கும் ஆற்றலும் பேசும் ஆற்றலும் பேசும் ஆற்றுலும் பெற்றிருக்கிறாய் எனவே நான் தீர்ப்புக் கூறுவதை விட நீ இதற்கு தீர்ப்புக் கூறுவது தான், சரியாக இருக்கும் என்றார். நாய் அரசர் கூறுவதை ஆமோதித்துவிட்டுத் தன் தீர்ப்பைக் கூறியது. அரசே இந்தப் பிராமணருக்கு நான் தம் தண்டனை இதுதான். இங்குள்ள விசுவநாதர் திருக்கோவிலில் ஆறுகாலப் பூஜைகளைக் கண்காணிக்கும், மணியம் பதவி காலியாக இருக்கிறது. அந்தப் பதவியில் இவரை நியமிக்க வேண்டும். மன்னரும், பிராமணரும் நாயின் இந்தத் மன்னர் பெரும் ஆச்சர்யத்துடன் நாயே நீ சொல்கிற பதவி மிகவும் மதிப்புமிக்கது. அதை இவருக்குத் தரச் சொல்கிறாயே! இது தண்டனையா? அல்லது வெகுமதியா? என்று கேட்டார். நாய் “மன்னா, நான் தந்திருப்பது, வெகுமதியல்ல.. கடுமையான தண்டனை” என்றது. மன்னர் “எப்படி?” என்று கேட்டார். சென்ற பிறவியில் நாள் பிராமணனாகப் பிறந்திருந்தேன். இதே கண்காணிப்பு மணியமாகப் பதவி வகித்தேன். இயன்றவரை தூய்மையோடு, கை சுத்தமாக இருந்து வந்தேன். இருந்தாலும் என்னை அறியமால் சில தவறுகள் ஏற்பட்டிருக்கும்... சிவன் சொத்து குலநாசம் அல்லவா? இறைவனுக்கு எதிரான அப்பிழையால் இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்து ஒரு வேளை உணவிற்காக, தெருத் தெருவாகச் சுற்றி வருகிறேன். இதே போல இந்தப் பிராமணனும், இந்தப் பணியில் அறியாமலாவது பிழை செய்யாமல் இருக்க முடியாது. நான் பெற்ற துன்பத்தை இவரும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதற்கே இந்தத் தண்டனை என்றது நாய்.


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்