அக்குபஞ்சர் கவுன்சின் பொதுக்குழு கூட்டம் - தேர்தல்

கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டமும் 2018 - 20 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. தி சுசான்லி குழுமத்தின் சேர்மேன் மீண்டும் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றார். புதிய பொதுச் செயலராக சுசான்லி டாக்டர் உஷாரவி அவர்கள் தேர்வு பெற்றார். மற்றும் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். முன்னதாக கவுன்சிலுக்கான சொந்த கட்டிடத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் அறிவழகன், மரியதாசன், ஆனந்தகிருஷ்ணன், ராஜலிங்கம், மனோஜ், ராமச்சந்திரன், சுபராணி கர்நாடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகம்மது இப்சுல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2020ஆம் ஆண்டில் கர்நாடகவில் 2022-ஆம் ஆண்டில் கேரளாவிலும் கவுன்சிலுக்கான சொந்த கட்டிடம் கட்டப்படும். கடலூர் சின்னகங்கணங்குப்பத்தில் உள்ள கவுன்சிலின் அலுவலகத்தில் நிரந்தர இலவச அக்குபஞ்சர் சிகிச்சை மையம் தொடங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் புதிய மருத்துவ கொள்கைகளில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையினையும் முன்னிலைப்படுத்த வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கான தனி பாடத்திட்டம் அமைத்து கல்லூரிகள் துவக்கி மூன்றாண்டு கல்வியாக போதித்து அவர்களை அக்குபஞ்சர் மருத்துவர்களாக நியமிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்ட நிறைவில் பதிவளார் டாக்டர் மனோஜ் நன்றி கூறினார்.


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்